Ads 468x60px


தினமணி செய்தி

dn


காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் உலகத் தமிழ் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் 75ஆம் ஆண்டு பவள விழாவையொட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் 75ஆம் ஆண்டு பவள விழாவையொட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் உலகத் தமிழ் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு மார்ச் 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்து பேராசிரியர்களும், அறிஞர்களும் பங்கேற்கின்றனர். அதில் "காலந்தோறும் கம்பன்' என்ற தலைப்பில் கம்பன் நேற்று - இன்று- நாளை என்ற மூன்று பிரிவுகளில் இக் கருத்தரங்கம் நடைபெறும்.

பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழில் பி.எச்.டி, எம்.பில். மற்றும் பொது ஆராய்ச்சிகளுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை கருத்தரங்கில் வாசிக்கலாம். இக்கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு கருத்தரங்கத்தின்போது, "கம்பன் தமிழ் ஆய்வுக் கோவை' என்ற பெயரில் நூலாக வெளியிடப்படும்.

மேலும் விவரங்கள் பெற: கம்பன் தமிழ் ஆய்வு மையம், கம்பன் பணி மண்டபம், காரைக்குடி. மின்னஞ்சல்: kambantamilcentre@gmail.com அலைபேசி: 9445022137 இந்தப் பதிவுக்கான கடைசித் தேதி இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி.

ஆராய்ச்சி மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ளும் வகையில் உள்நாட்டு ஆசிரியர்களுக்கு ரூ.500-ம் மாணவர்களுக்கு ரூ.350-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு நடைபெறும் 2 நாள்களுக்கு தங்கும் வசதி, உணவு மற்றும் ஆய்வுக் கோவை நூலும் இலவசமாக அளிக்கப்படும்.

பரிசு: ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2012 வரையுள்ள காலங்களில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் வெளியாகியுள்ள கம்பன், கம்பராமாயணம் பற்றிய சிறந்த ஆய்வு நூலை எழுதிய ஆசிரியர்களுக்கு ரூ.5,000, பதிப்பாளர்களுக்கு ரூ.2,500 பரிசாக அளிக்கப்படும்.

Sunday 4 November 2012

நெறிமுறைகள்


  • பல்கலைக்கழகம், கல்லூரி, நிறுவனம் சார்ந்த பேராசிரியர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையுடன், கல்லூரி / நிறுவன முழு முகவரி , தொலைபேசி எண் / அஞ்சல் குறியீட்டு எண் விவரங்களை இணைத்தே அனுப்பி உதவிடுக.
  • மேற்குறித்த கல்வி நிறுவனம் எதனையும் சாராத தமிழ் ஆர்வலர்களும் / இலக்கியச் சுவைஞர்களும், கம்பநேயர்களும் உள்ளூர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரின் அல்லது, கம்பன் கழகத் தலைவரின் / செயலாளரின் முத்திரையுடன் கூடிய பரிந்துரையோடு கட்டுரைகளை அனுப்பலாம்; கட்டுரைகள் அனுப்பாத இலக்கியச் சுவைஞர்கள் தம்மை ஒரு சுவைஞராக அதற்குரிய  கட்டணம் செலுத்தி, பதிவு செய்து இருநாட்களும் பங்கேற்று மகிழலாம்; இன்தமிழ்ச் சுவை பருகி ஏற்றமிகு தமிழ் வளர்த்த பெருமை பெறலாம்.
  • ஆய்வுக் கட்டுரைகள் முற்றிலும் பேராளார்களின் சொந்தப் படைப்பாகவே இருத்தல் வேண்டும். கண்டிப்பாக பிறர் படைப்புக்களைத் தழுவியதாகவோ, கையாடியதாகவோ இருத்தல் கூடாது.கூறப் பெறும் ஆய்வுக் கருத்துக்கள் /முடிவுகளுக்கு கட்டுரையாளரே பொறுப்பாவார்.
  • ஆய்வு மானாக்கர்கள் தம் நெறியாளர் பரிந்துரையும் பதிவுப் படிவமும் இல்லாத ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப் பெறா.
  • ஆய்வுக் கட்டுரைகள் ஏ4 தாளில் இருவரி இடைவெளியுடன், 750 முதல் 800 சொற்கள் அளவினதாய்,  பாமினி எழுத்துருவில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் , கணினி வழி ஒளியச்சு செய்து, மின்னஞ்சல் வழி / குறுவட்டு வடிவில் அனுப்ப வேண்டும். முடிந்த அளவு பிறமொழிக் கலப்பற்றதாய் இருத்தல் வேண்டும்.கையெழுத்துப் படிகள் கண்டிப்பாய் ஏற்கப் பெறா.
  • ஆய்வுக் கட்டுரைகள் மதிப்பிடு வல்லுனர் / அறிஞர் குழுவின்  ஏற்பினைப் பெற்று, கம்பன் தமிழ் ஆய்வுக் கோவையாக நூல் வடிவில் மிஷிஙிழி எண்ணுடன் அச்சிடப் பெற்று கருத்தரங்கில் பேராளர் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி வழங்கப்பெறும். இரண்டொரு அதிகப்பிரதி வேண்டுவோர் முன் கூட்டியே பதிவு செய்து கொண்டு அதற்குரிய தொகையினைச் செலுத்தின் அவ்வண்ணம் பெறலாம்.
  • தேர்ந்தெடுக்கப் பெற்ற கட்டுரைகளில் அத்தகு வல்லுனர் /அறிஞர் குழுவின் சிறப்புப் பரிந்துரை/ முத்திரை பெறும் பத்துக் கட்டுரையாளர்க்குச் சிறப்புப் பரிசுகள் கருத்தரங்கில் வழங்கப் பெற்று கௌரவிக்கப் பெறுவர்.
  • கருத்தரங்கிற்கு நேரில் வரும் பேராளர்க்கு மட்டுமே இவ்வாய்வுக் கோவைப் பிரதியும், பிற வெளியீடுகளும், இன்னபிற பயன்தரு பொருட்களும் வழங்கப் பெறும்.
  • பேராளர்க்கு இருநாட்களும் உணவும், பொதுத் தங்குமிட படுக்கை வசதியும் கொடுக்கப் பெறும். தனிஅறை/ பகிர்அறை வசதி வேண்டுவோர், முன்கூட்டியே தெரிவித்து அதற்குரிய கட்டணம் செலுத்தின் அவ்வசதி செய்து தரப் பெறும்.அதேபோல் முன்னே, பின்னே கூடின நாள் தங்க விரும்புவோரும் முன் கூட்டியே தெரிவித்து, உரிய கட்டணம் செலுத்தின் வசதி செய்து தரப் பெறும்.
  •  பேராளர்கள், அஞ்சல் குறியீட்டு எண்ணுடனான தம் முழு முகவரி, கை பேசி எண், மின்னஞ்சல் இருப்பின் அம்முகவரி, ஆகியனவற்றைத் தெரிவிக்க வேண்டுகிறோம். கருத்தரங்கு குறித்த அழைப்பு, அவசரச் செய்திகள், குறுஞ்செய்திகளாக கைபேசி / மின்னஞ்சல் வழியாக  மட்டுமே அனுப்பப் பெறும்.
  • மேற்கோள் பாடல்களின் எண்ணையும், அடிகளையும் / பிற துணை நின்ற நூல்களின் விவர, பக்க  அடிக்குறிப்புகளையும்  அவசியம் ஆங்காங்கே குறிப்பிட வேண்டும்; அவ்வாறு செய்யப் பெறாத பாடல்கள் / பகுதிகள் முழுவதுமாக நீக்கப் பெறும்.
  • தேர்ந்தெடுக்கப் பெறாத கட்டுரைப் பிரதிகள் எக்காரணங் கொண்டும் திருப்பி அனுப்பெறா. தேர்ந்தெடுக்கப் பெறாக் கட்டுரைகளுக்குரிய பேராளர் கட்டண வரைவோலைகள் 31.01.2013க்குள்  உரியவர்க்குத் திருப்பி அனுப்பப் பெறும்.

No comments:

Post a Comment

பேராளர் கட்டண விவரம்


பேராளர் கட்டண விவரம்

உள்நாட்டுப் பேராசிரியர் (பேராளர்)

ரூ.500/-

ஆய்வு மாணாக்கர் ( Students registered for M.Phil / Ph.D programmes) (பேராளர்)

ரூ 350/-

சுவைஞர் (கட்டுரை அனுப்புவோரும் / அனுப்பாதோரும்)

ரூ.250/-

வெளிநாட்டுப் பேராளர்

அமெரிக்க$ 50/-

சுவைஞர்

அமெரிக்க $ 25/-



இக்கட்டணங்கள் காரைக்குடியில் மாற்றத் தக்க (Crossed Bank Demand Draft) குறுக்குக் கோடிட்ட வங்கி வரைவோலையாக “KAMBAN TAMIL RESEARCH CENTRE” என்ற பெயருக்கு Registered Post / Speed Post / Courier Mail மூலமாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.

பதிவுப் படிவமும், ஆய்வுக் கட்டுரையும், கட்டணமும் 15-12-2012க்குள் காரைக்குடி அலுவலகத்திற்கு வந்தடைய வேண்டும்.